கர்மயோகி வை. பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் வாழ்வியல், சமூகப் பணி, மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட
“பித்தனும்… சித்தனும்…” நூல் வெளியீட்டு விழா சிறப்பாகவும் சிறப்புமிக்கதாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் ஆட்சிமன்றத் தலைவர்கள்
🌿 Vr. தேவசகாயம் ஐயா
🌿 Vr. இளங்கோவன் ஐயா
🌿 Vr. முஸ்ரி பழனிச்சாமி ஐயா
ஆகியோரும்,
🌿 நாகர்கோவில் மாவட்ட அமைப்பாளர் Vr. நாகராஜ் ஐயா அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும்,
🌿 Vr. கமல் ராஜ்,
🌿 Vr. அபுதாஹிர்,
🌿 Vr. குமாரவேல்,
🌿 Vr. லட்சுமி அம்மா
ஆகியோர்களும் கலந்து கொண்டு தங்களது வருகையால் நிகழ்விற்கு பெருமை சேர்த்தனர்.
ஒரு மனிதனின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் சமூக அர்ப்பணிப்பு நூலாக வடிவம் பெறுவது அரிது. அந்த வகையில், கர்மயோகி வை.
பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் வாழ்வியல் பயணத்தைப் பதிவு செய்யும்
“பித்தனும்… சித்தனும்…” நூல், பலருக்கும் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திய அனைவருக்கும், கலந்து கொண்டு வாழ்த்திய பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி 🙏🏻

