Front Page Government News

நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு அருண்ராஜ் அவர்களுடன் முக்கிய சந்திப்பு – இட்மா

இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம், தமிழ்நாடு – 16-07-2026

அத்துணை உறுப்பினருக்கும் பணி கலந்த வணக்கம் நேற்றைய தினம் 16 7 2026 நமது தமிழ்நாட்டின் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருந்தோம் அவரை சந்திப்பதற்கு எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது சமயம் தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களை சந்தித்தோம். அவரிடம் நமது இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் கோரிக்கையை மனுவாக சமர்ப்பித்தோம். நமது சங்கத்தின் உடைய தலைமை நிர்வாகியான அய்யா தேவசகாயம் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். அமைச்சர் அவர்களும் அதற்கு நல்ல செய்தி தருவதாக சொன்னார்கள்.

இந்த நிகழ்விலே பொள்ளாச்சி தலைமை நிர்வாகி தேவசகாயம் ஐயா அவர்கள், தர்மபுரி மாவட்டத்தின் அமைப்பாளர் வெங்கடேசன் அய்யா அவர்கள், சிவகாமராஜ் ஐயா அவர்கள், கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்த பவுல் சாமி அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் துணை அமைப்பாளர் கே மாசிலாமணி அவர்கள் ஆகிய ஐந்து நிர்வாகிகளும் அமைச்சரை சந்தித்து எதிர்காலம் வைத்தியர்களுக்கு பொற்காலமாக அமைய வேண்டும் என்று நமது கோரிக்கையை எடுத்துரைத்தோம்.  தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களின் முதன்மை பி ஏ பிரவீன் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அமைச்சர் அருண்ராஜ் அவர்களின் சீனியர் அசிஸ்டன்ட் அவர்களிடமும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

நமது இந்திய பாரம்பரிய வைத்தியர் சங்கத்தின் கோரிக்கைகளை தேவசகாயம் ஐயா அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். தமிழ்நாட்டின் மூன்று லட்சம் வைத்தியர்கள் பயன்பெற வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

கூடிய விரைவில் முதல்வரை சந்திக்கின்றோம். எதிர்காலம் சிறப்புடன் அமைய வேண்டும் வைத்தியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு பெற வேண்டும். நமது முயற்சி திருவினையாக்க வேண்டும் இந்திய பாரம்பரிய வைத்திய சங்கம் வெற்றிக்கான வேண்டும் எல்லோரும் ஒத்துழையுங்கள் எல்லா வைத்தியரும் முதலில் பெயர் பலகை வையுங்கள் நன்றி வணக்கம்

You may also like...